இறப்பு செய்தி

இரவாஞ்சேரி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த புகாரி அவர்களின் தகப்பனார் நூர் முஹம்மது இன்று 10-09-2014 வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

லியாகத் அலி, ரம்ஜான், அலி இல்லத் திருமண விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இரவாஞ்சேரி காயித மில்லத் தெரு (மர்ஹூம்) M.இபுராமுசா அவர்களின் செல்வப்புதல்வன் தீன்குலச்செல்வன்

E.அப்துல் ஹமீது
மணாளருக்கு

நாகை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, நக்கம்பாடி ஊராட்சி, கீழ அய்யனார்குடி, பாரதி சாலை, புது ரோடு (மர்ஹூம்) M.குப்ப பிச்சை – K.சர்புன்னிசா அவர்களின் செல்வப்புதல்வி தீன்குலச்செல்வி

K.பெனாசிர் பானு
மணாளியை

இன்ஷா அல்லாஹ் பெரியோர்களால் நிச்சயித்த வண்‍ணம் இரவாஞ்சேரி ஜாமிஆ மஸ்ஜிதில்

14-08-2014 வியாழக் கிழமை பகல் 11-30 மணிக்கு நிக்காஹ் நடைப்பெறுகிறது.

“பாரக்கல்லாஹூ லக்க வபராக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

கவுன்சிலர் H.புருஹானுதீன் இல்ல திருமண விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இரவாஞ்சேரி கீழத் தெரு (மர்ஹூம்) ஹபீப் முஹம்மது அவர்களின் மகனும் H.புருஹானுதீன் அவர்களின் சகோதரரும் ஆகிய தீன்குலச்செல்வன்

H.சகாபுதீன்
மணாளருக்கு

ஆடுதுறை (மர்ஹூம்) E.ராஜ் முஹம்மது ஹாஜியா (மர்ஹூம்) தாவூது அம்மாள், T பண்டாரவாடை (மர்ஹூம்) K.A.ராஜ் முஹம்மது – ஹாஜியா R.பரீதாபீவி இவர்களின் பேத்தியும், Er.R.M.ஹாஜாமைதீன் – மின்ஹாஜ்நிசா அவர்களின் தீன்குலச்செல்வி

யாஸ்மின் பின்தி ஹாஜாமைதீன்
மணாளியை

இன்ஷா அல்லாஹ் பெரியோர்களால் நிச்சயித்த வண்‍ணம் இரவாஞ்சேரி ஜாமிஆ மஸ்ஜிதில்

03-08-2014 ஞாயிற்று கிழமை பகல் 11-30 மணிக்கு நிக்காஹ் நடைப்பெறுகிறது.

“பாரக்கல்லாஹூ லக்க வபராக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

திருமண விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

1014089_694677827224608_414706307_n

இரவாஞ்சேரி (மர்ஹூம்) சி.மு.இப்ராஹீம், சோழபுரம் (மர்ஹூம்) S.M.அப்துல் ஹமீது இவர்களின் பேரனும், (மர்ஹூம்) ஹாஜி.S.M.I.அப்துல் சலாம் – ஹாஜியா ஆஸ்மான்பரி அவர்களின் செல்வபுதல்வன் தீன்குலச்செல்வன்
A.S.அரபாத் அலி
மணாளருக்கு

சோழபுரம் (மர்ஹூம்) S.M.அப்துல் ஹமீது, S.N.பேட்டை (மர்ஹூம்) S.அப்துல் வாஹீது இவர்களின் பேத்தியும், ஹாஜி. A.H.சாதிக் அலி – ஹைஜா நாச்சியா அவர்களின் செல்வபுதல்வி தீன்குலச்செல்வி

S.அரபாத் நிஷா
மணாளியை

இன்ஷா அல்லாஹ் பெரியோர்களால் நிச்சயித்த வண்‍ணம் இரவாஞ்சேரி ஜாமிஆ மஸ்ஜிதில்

17-05-2014 ஞாயிற்று கிழமை பகல் 11-30 மணிக்கு நிக்காஹ் நடைப்பெறுகிறது.

“பாரக்கல்லாஹூ லக்க வபராக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

இறப்பு செய்தி

இரவாஞ்சேரி புதுத் தெருவை சேர்ந்த பஷீர், சபீர் மற்றும் நசீர் அவர்களின் தகப்பனார் O.S.ரஹீம் இன்று 15-05-2014 வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

கல்வி பெறும் உரிமை சட்டம்

கல்வி பெறும் உரிமை சட்டம் : தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி !

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-05-2014

கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி “Right To Education” (RTE), நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில், 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க, தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களை சேர்க்க ‘மே 18′ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இவ்வருடம் சுமார் 80,000 மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்தில், குறைந்தது 8,000 முஸ்லிம் மாணவர்கள் பயன் பெறும் வாய்ப்புள்ளது.

ஒரு மாணவரின் ஆண்டுக்கட்டணம் ரூ. 10,000 என வைத்துக் கொண்டால், 8 கோடி ரூபாய் அளவுக்கு சமுதாயம் பயன் பெறமுடியும்.

இத்திட்டத்தின் மூலம், முஸ்லிம்கள் தான் அதிகளவு பயன் பெறமுடியும், காரணம் ஏழை எளிய மக்களில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் தான் அதிகமாக உள்ளது.

அரசு ஊழியர்களின் பிள்ளைகளோ, வசதி படைத்தவர்களோ இத்திட்டத்தில் சேரவே முடியாது.

இதற்கான விண்ணப்பம் வழங்கும் கடைசி நாளாக ‘மே 18′ஐ அறிவித்திருந்தாலும், 16 ந்தேதி வெள்ளிக்கிழமை ‘தேர்தல் முடிவுகள்’ வரவிருப்பதாலும்,

அதற்கடுத்து, 17 மற்றும் 18 ஆகிய தேதிகள், விடுமுறை நாட்கள் என்பதாலும், வியாழக்கிழமை மே 15 வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறமுடியும்.

சிக்கல்களும் – தீர்வுகளும்
”””””””””””””””””””””””””””””””””
தனியார் பள்ளி நிர்வாகங்கள், இதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் இருப்பதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு.

1) ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு கண்டிப்பாக செலுத்தும் என்ற உத்தரவாதம் இருந்தாலும், கணக்குகள் சமர்ப்பித்து அடுத்த ஆண்டு தான் கல்வி நிறுவனங்களுக்கு, அரசிடமிருந்து பணம் கிடைக்கும்.

2) அரசு நிர்ணயித்த அளவு தொகை தான் கிடைக்கும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகையை வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, இது (சிறிய அளவில்) பாதிப்பை ஏற்படுத்தும்.

(இத்திட்டத்தில், கடந்த ஆண்டு கல்வி பயின்ற 23,0248 மாணவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டு பயின்ற சுமார் 8,000 மாணவர்களுக்கும் சேர்த்து, ரூ. 25 கோடி (சராசரியாக ஒரு மாணவருக்கு ரூ.8,000 என்ற கணக்கில்), இனிமேல் தான் அரசு செலுத்தப் போகிறது.)

இத்திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில், தனியார் பள்ளிகளின் தயக்கத்துக்கு இது தான், முக்கிய காரணம்.

நாம் செய்ய வேண்டியது என்ன?
””””””””””””””””””””””””””””””””””””””””””
ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று, நமது குடும்ப சூழலையும், வருமான நிலைமையையும் எடுத்துச்சொல்லி, இத்திட்டத்திற்கு தாங்களே அதிகம் தகுதியுடையவர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ள நடைமுறை சிரமங்களையும் நாம் கருத்தில் கொண்டு, மிகவும் நளினமான முறையில் நடந்துக் கொள்ள வேண்டும்.

தனித்தனியாக செல்லாமல், 4 – 5, பெற்றோர்களாக சேர்ந்து சென்று பேசவேண்டும்.

பக்குவமாக பேச வேண்டிய அதேநேரம், நாங்கள் ஏழைகள் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறவேண்டும்.

பள்ளி நிர்வாகம், ஓரிரு முறை நம்மை அலைய விடுவது போன்று தோன்றினாலும் சோர்ந்து விடக்கூடாது.

எப்போது சென்றாலும், 4 – 5 பெற்றோர்களாக, சேர்ந்தே செல்ல வேண்டும், நமது சுயநலன் காரணமாக, பள்ளி நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகி விடக்கூடாது.

எங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பில்லை என்றால், இத்திட்டத்தின் பயனாளிகள் யார் என்பதை, (பக்குவமாக) கேட்டு, நெருக்கடி கொடுக்க வேண்டும்.

நாம், நமது சமுதாய மாணவர்களுக்காக போராடும் அதேவேளையில், நம்மைவிட வசதி குறைந்த பிற சமுதாய மாணவர்கள் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் , நம்மில் உள்ள செல்வந்தர்கள் இத்தட்டத்தை பயன்படுத்த முயலக்கூடாது.

மீண்டும் நினைவூட்டுகிறோம்
””””””””””””””””””””””””””””””””””””””””
இது, ஆண்டுக்கு ரூ.1,000 அல்லது 2,000 கிடைக்கும் ‘சிறுபான்மை கல்வி உதவி’ கிடைப்பதைப் போன்ற சாதாரண திட்டம் அல்ல.

விழித்திருந்து சில நாட்கள் செயல்பட்டால், சமுதாயத்துக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு நன்மை உண்டாகும்.

ஆங்காங்கே உள்ள சமுதாய இயக்கங்களும் இதில் தலையிட்டு, மக்களுக்கு நன்மை பயக்க வழிக்கான வேண்டும்.

தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள, நம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட, ஒரு வழக்கரிஞரை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றும் பேசலாம்.

இது விஷயத்தில் உதவி தேவைப்படுவோர் 9380945727 என்ற நம்பரில், என்னை (ஜாகிர் ஹுசைன்), தொடர்பு கொள்ளலாம்.

அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி, தீர்வு கொடுக்க 24 மணி நேரமும், இன்ஷா அல்லாஹ்… நான் தயார்.

முக்கிய குறிப்பு
”””””””””””””””””””””’
நாம் இப்படி பள்ளி நிர்வாகத்துடன் மோதுவதால் நமது பிள்ளைகளுக்கு பள்ளி நிர்வாகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைப்பது எவ்வகையிலும் சரியான விஷயமல்ல.

எனவே கண்ணியம் காத்து, நமது கோரிக்கை வெல்வதில் கவனமும் உறுதியும் தேவை.

விண்ணப்ப படிவங்கள், அந்தந்த பள்ளியில் மட்டுமின்றி, கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருஹான் & சாதிக் இல்லத் திருமண விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இரவாஞ்சேரி பள்ளிவாசல் தெரு (மர்ஹூம்) அ.மீ.முஹம்மது இப்ராஹீம், (மர்ஹூம்) அப்துல் மஜீது இவர்களின் பேரனும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் செல்வபுதல்வன் தீன்குலச்செல்வன்

M.E.முஹம்மது அலி
மணாளருக்கு

தரங்கம்பாடி தாலுக்கா, கிளியனூர் (மர்ஹூம்) அப்துல் மஜீது அவர்களின் பேத்தியும், ஜனாப்.பஷீர் அகமது – பாரிஷா பேகம் அவர்களின் செல்வபுதல்வி தீன்குலச்செல்வி

B.நஸ்ரின் பானு
மணாளியை

இன்ஷா அல்லாஹ் பெரியோர்களால் நிச்சயித்த வண்‍ணம் இரவாஞ்சேரி ஜாமிஆ மஸ்ஜிதில்

12-05-2014 திங்கட்கிழமை பகல் 11-30 மணிக்கு நிக்காஹ் நடைப்பெறுகிறது.

“பாரக்கல்லாஹூ லக்க வபராக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

ப்ளஸ் 2 தேர்வு முடிவு திருவாரூர் 83.7% தேர்ச்சி

திருவாரூர்: ப்ளஸ் 2 தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் ஜி.ஆர்.எம். பெண்கள் பள்ளி மாணவி முர்ஷிதாநஸ்ரூன் முதலிடமும், 2ம் இடத்தை ஐஸ்வர்யா ஆகியோர் பிடித்தனர். மாவட்டத்தில் 83.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 754 மாணவர்கள், 8 ஆயிரத்து 250 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 4 பேர் எழுதினர். இதில் 4,483 மாணவர்கள், 7,239 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 722 பேர் தேர்ச்சி பெற்றனர். திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் பள்ளி மாணவி முர்ஷிதாநஸ்ரூன் தமிழ் 192, ஆங்கிலம் 188, பொருளாதாரம் 200, வணிகவியல் 200, கணக்குபதிவியியல் 200, வணிககணிதம் 197 என மொத்தம் 1,177 மார்க் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். இதே பள்ளி மாணவி ஐஸ்வர்யா தமிழ் 190, ஆங்கிலம் 188, பொருளாதாரம் 200, வணிகவியல் 200, கணக்குபதிவியியல் 200, வணிககணிதம் 197 என மொத்தம் 1,175 மார்க் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்தை பிடித்தார். திருத்துறைப்பூண்டி ஆண்டனி மெட்ரிக் பள்ளி மாணவர் செர்வின், தமிழ் 190, ஆங்கிலம் 187, இயற்பியல் 199, வேதியியல் 199, கணினி அறிவியல் 200, கணிதம் 198 என மொத்தம் 1,173 மார்க் பெற்று 3ம் இடம் பிடித்தார்.

இதேபோல் மன்னார்குடி தரணி மெட்ரிக் பள்ளி மாணவர் மணிவேல், தமிழ் 189, ஆங்கிலம் 191, இயற்பியல் 199, வேதியியல் 199, உயிரியியல் 197, கணிதம் 198 என மொத்தம் 1,173 மார்க் பெற்று மாவட்டத்தில் 3ம் இடம் பிடித்தார். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசுப் பள்ளி, மன்னார்குடி திருமக்கோட்டை அரசு பெண்கள்ப் பள்ளி ஆகியவை 100% தேர்ச்சி பெற்றது. இயற்பியலில் 2, உயிரியலில்1, கணினி அறிவியலில் 3, கணிதத்தில் 5, பொருளாதாரத்தில் 6, பொருளாதாரத்தில் 7, கணக்குபதிவியியலில் 10, என மாவட்டத்தில் 34 பேர் சென்டம் பெற்றனர். மாவட்டம் முழுவதும் 83.7 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டு 82.53 தேர்ச்சி பெற்றது தற்போது தேர்ச்சி ஒரு சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது.

துபாய் பேருந்து விபத்தில்10 இந்தியர்கள் பலி

துபாய் பேருந்து விபத்தில் பீகாரைச் சேர்ந்த 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பலியான இந்தியர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.துபாயின் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்யும் 27 வெல்டிங் பணி செய்யும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

எப்போதும் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் எமிரேட்ஸ் சாலையில் பேருந்து வேமாக சென்றது. அப்போது அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியது. பேருந்து மோதியதும் வழுக்கி 5 மீட்டர் தொலைவிற்கு சென்றது.இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். உடனடியாக மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.விபத்தில் பலியானவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த இந்திய மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுதான் இந்த ஆண்டின் மிக பெரிய விபத்து என்று துபாய் போலீசார் தெரிவித்துள்ளார்.

பேரளம் பள்ளிவாசல்

10246420_320437421436792_3272170165836160023_n

இந்தப் படத்தில் காணப்படும் பள்ளிவாசல் திருவாரூர் மாவட்டம் பேரளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.இந்தப் பள்ளி 1995ஆம் ஆண்டு அல்லாஹ்வின் உதவியால் அரபு தேசத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவரால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இந்த ஊரில் தற்போது நாற்பதிர்கும் குறைவான முஸ்லிம் குடும்பங்களே வசிக்கிறார்கள் அதில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் உடையவர்களாகவே உள்ளனர் . இந்த பள்ளிவாசலுக்கு என்று எந்த வருமானமும் கிடையாது இதனால் இப்பள்ளியில் தொழுகை நடத்த இமாம்ங்கள் யாரும் இல்லை . இப்பள்ளியின் முத்தவல்லி காதர் சுல்தான் என்பவர் தான் தற்போது இப்பள்ளியை சுத்தம் செய்தும் தொழுகை நடத்தியும் வருகிறார். அவருக்கு சொந்தமாக சிறிய தொழில் இருப்பதால் அதில் வரும் வருமானத்தை வைத்து பள்ளிக்கு ஆகும் சிறிய செலவுகளை கவனித்து வருகிறார் .

இப்பள்ளியில் ஒரு இமாமை நியமிப்பதர்க்கு மாதம் 6000 ரூபாய் முதல்7000ரூபாய் வரை தேவைப்படுகிறது மேலும் பள்ளியில் சில பகுதிகள் மிகவும் சேதமடைந்துள்ளது அதைச் சரிச்செய்வதற்கும் அவர்களுக்கு பணம் தேைப்படுகிறது இதைப் படிப்பவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்தால் கீழே காணும் தொலைபேசி என்னை தொடர்புக்கொள்ளவும் இவர்களுக்கு நாம் உதவி செய்ய அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் .

தொடர்புக்கு
A.காதர் சுல்தான்
+91 9698455248

Powered By Indic IME